உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

லால்குடி, டிச.30: லால்குடி ரவுண்டானாவில் நடந்த விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் வைரமணி, எம்எல்ஏ சவுந்தரபாண்டியன், நகர செயலாளர் துரைமாணிக்கம், ஒன்றிய குழு தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன், புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராசா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திரளான பெண்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து கும்ப மரியாதை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் துரைகந்தசாமி, புள்ளம்பாடி நகர செயலாளர் முத்துக்குமார், கல்லக்குடி நகர செயலாளர் பால்துரை, பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், இளங்கோவன், உமையாள், மாவட்ட கவுன்சிலர்கள் ஆதிநாயகிரவி, தீபாசுதாகர், ஜெயலட்சுமி கருணாநிதி, பாலவினோதினி செந்தில் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், இளைஞரணியினர், திமுக நிர்வாகிகள் மற்றும் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், கே.என். அருண், எம்எல்ஏ., ஸ்டாலின் குமார், மாநகர செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் முத்துச்செல்வம், குடமுருட்டி சேகர், விஜயா ஜெயராஜ், சேர்மன் துரைராஜ், சேர்மன் தர், நகர செயலாளர் துரை, பகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories: