பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள நெலகாங்கர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் கும்பல் நுழைந்தது. இந்த கும்பல் ரவி(25) மற்றும் திருப்பதி சோதி(35) ஆகியோரை அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து இழுந்து வந்து ஆயுதங்களால் தாக்கியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் நக்சல் கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.
இது குறித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். பிஜப்பூர் உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் உள்ள கிராம மக்களை குறிவைத்து நக்சல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 14ம் தேதி பாஜ தொண்டரை நக்சல்கள் கழுத்தை நெரித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
