காரைக்கால் தலத்தெரு கிராமத்தில் மருத்துவ குணம் மிக்க ‘கருப்பு கவுனி’ நெல்சாகுபடி பயிற்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

காரைக்கால்,டிச.30: காரைக்கால் தலத்தெரு கிராமத்தில் மருத்துவ குணம் மிக்க கருப்பு கவுனி நெல்சாகுபடி பயிற்சி முகாம் நடந்தது. இதில் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். காரைக்கால் தலத்தெரு கிராமத்தில் இயற்கை  விவசாயி இளங்கோ என்பவர் கருப்பு கவுனி நெல்லை சாகுபடி செய்து, சங்கரன்பந்தல் அருகே கொடவளாகம் கிராமத்தில் ஒரு பிரத்தியேக ஆலையில் அதை அரிசியாக்கி விற்பனை செய்து சாதனை படைத்துள்ளார். அதை அறிந்த புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 4ம் ஆண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று வரும் 28 மாணவ, மாணவிகள், அவர்களது ஊரக மற்றும் விவசாய அனுபவ களப்பணி என்ற பயிற்சியின் பாடத்திட்ட ஆசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் அங்கு சென்று அதன் சாகுபடி குறித்து களப் பயிற்சியினை பெற்றனர். மாணவிகள் சிவமங்களா மற்றும் விஷ்ணு பிரியா நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். மாணவர் சஞ்ஜய் காந்த் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related Stories: