சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த கைதிக்கு மருத்துவ வசதிகளை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த தனுகா ரோசன் என்பவர் உபா சட்டத்தின் கீழ் கடந்த 2019ல் கைது செய்யப்பட்டார். மனுதாரர் தனிமைச் சிறையில் உள்ளதால் மருத்துவ சிகிச்சைகளை பெற முடியவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. மனுதாரருக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்க சிறை நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
