வாஷிங்டன்: கனடா தொலைக்காட்சி ஒன்றில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன் வர்த்தகம் குறித்து பேசிய வரிகளை பயன்படுத்தியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க வரிகளை எதிர்க்கும் கனடாவின் தொலைக்காட்சி விளம்பரம் உண்மைகளை தவறாக குறிப்பிட்டுள்ளதோடு, இந்த விளம்பரத்தில் ரொனால்ட் ரீகன் கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதனை தொடர்ந்து கனடா உடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப், தனது சமூக வலைதள பதிவில், ‘‘விளம்பரத்தில் ரொனால்ட் ரீகன் வரிகள் பற்றி எதிர்மறையாக உள்ளது. கனடாவின் மோசமான நடத்தையின் அடிப்படையில் அவர்களுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
