தஞ்சை: நெல் கொள்முதல் பணிகள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பொய்யான தகவல் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கையால் 50 நாள்களில் 10 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் மூட்டைகளை வைக்க இடம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல் என்று கூறினார்.
