பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆலோசனை!!

சென்னை: பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நெல் கொள்முதல் குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீரில் மூழ்கிய பயிர்களில் 33%, அதற்கு மேல் சேதம் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: