கோவை: எட்டிமடையில் உள்ள தோட்டத்தில் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்விச் சென்றதால் மக்கள் அச்சம் அடைந்தனர். வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். இரண்டு தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு, சிறப்புக் குழு மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
