ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை

மாஸ்கோ: ரஷ்யா நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தி உள்ளது. இதுகுறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை வௌியிட்ட செய்தியில், “வடமேற்கு ரஷ்யாவில் உள்ள பிளசெட்ஸ்க் ஏவுதளத்தில் இருந்து யார்ஸ் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பலில் இருந்து பேரண்ட்ஸ் கடலில் ஏவி சோதனை நடத்தப்பட்டது. மேலும், குண்டு வீச்சு விமானங்கள், நீண்டதூர கப்பல் ஏவுகணைகளும் சோதனையிடப்பட்டன. இதனை அதிபர் புடின் கிரெம்ளின் மாளிகையில் இருந்து பார்வையிட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: