‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நேற்று உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன. இதையொட்டி திமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த சந்திப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து, அவர்களின் தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது. திமுக ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிலையில், ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உளுந்தூர்பேட்டை, செய்யாறு தொகுதி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக தனித்தனியாக அவர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். பின்னர், ‘அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். தொண்டர்களை அரவணைத்துச் செல்வதுடன், திட்டங்கள் தொடர்பாக மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேணடும். திமுக மட்டுமின்றி கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்’ என்று முதல்வர் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: