சென்னை: காவலர் வீரவணக்க நாளை ஒட்டி காவலர் நினைவுச் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். சென்னையில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பணியின்போது மறைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கான காசோலையையும், காவல்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கினார்.
