எம்ஜிஆர் மருத்துவ பல்கலை சார்பில் பன்னாட்டு மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவத்தின் எதிர்காலம் எனும் தலைப்பில் “எதிர்கால மருத்துவம் 2.0’’ இரண்டாவது பன்னாட்டு மருத்துவ மாநாட்டை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மின் இதழ், துணைவேந்தர் நாராயணசாமி இயற்றிய “நவீன மருத்துவ முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” எனும் நூல், மாநாட்டு மலர் மற்றும் ஆராய்ச்சி கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகமும் இணைந்து மருத்துவ பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ உயிரியக்கவியல் பயிலரங்கு நடத்த உள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் மற்றும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த ஆசிரியர்களால் பல்வேறு சிறப்புகளில் மருத்துவத்தின் எதிர்காலம் என்ற கருப்பொருளில் சுமார் 787 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்கள் இடம்பெற உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், பல்கலை துணை வேந்தர் நாராயணசாமி, மருத்துவக்கல்வி இயக்குநர் சுகந்தி ராஜகுமாரி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி, பன்னாட்டு மருத்துவ பேராசிரியர்கள் ரெபேக்கா மில்லர், கபிலன் தர்மராஜன், நாகலிங்கம் வர்ணகுலேந்தரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: