ஓசூர்: அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி ஓசூரில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அடுத்த ஆண்டு 55வது ஆண்டில் இந்த இயக்கம் இருக்குமா என்ற கேள்விக்குறி எழுப்பப்பட்டு, தொய்வான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறது. அவர் வேறு ஒரு கட்சியின் கொடியை பார்த்து இதோ கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்கிறார். விஜய்யிடமிருந்து அழைப்பு வருமா என்ற நிலையை இன்று ஏற்படுத்தி விட்டார். விஜய் வெளியே வருவாரா அவரது கால் கிடைக்குமா, அதில் விழலாமா என்ற மோசமான ஒரு நிலைமையை உருவாக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற மனிதன் பழனிசாமி. களைகள் எல்லாம் அகற்றப்பட வேண்டும் என அவர் சொன்ன களை என்பது பாஜவாக கூட இருக்கும். அவர்களுக்கு முதுகில் குத்த பார்ப்பார். பொறுத்திருந்து பார்ப்போம். பாஜவை அகற்றிவிட்டு விஜய் உள்ளே வரவேண்டும் என நினைக்கிறார் போல தெரிகிறது. இவ்வாறு புகழேந்தி கூறினார்.
