ஓமலூர்: சேலம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: எந்த மாநிலத்தில் அதிகாரம் இல்லையோ அந்த இடத்தில் அவர்களது ஆட்களை ஆளுநராக அமர்த்தி, எந்த ஒரு நல திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் தடுக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஒரு நியமிக்கப்பட்ட ஒற்றை நபருக்கு இருக்கிறதா. இவ்வாறு சீமான் கூறினார்.
