போக்சோ சட்டம்.. அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை: டிஜிபி சுற்றறிக்கை!

சென்னை: போக்சோ சட்டத்தின்கீழ் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டப்பிரிவுகள் இருந்தால் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யலாம். வன்புணர்வு செய்யப்படாமல் குழந்தை காமடைந்தால் காயத்தின் தன்மையை அறிவதற்கு மட்டும் பரிசோதனை நடத்தலாம். சாதாரண பாலியல் குற்றத்துக்கு மருத்துவ பரிசோதனை செய்வதால் குழந்தை மனஉளைச்சலுக்கு ஆளாவதை அடுத்து புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: