நாகை தாசில்தார் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டம்

நாகை, டிச.29: 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை தாசில்தார் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பகு தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன் சுப்பிரமணியன், நகர செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பேசினார். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த பணியாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும். புயல், மழை வெள்ளத்தால் பாதித்த விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். நிவர் புயலால் உயிரிழந்த ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு அரசு அறிவித்த இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தது. பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Related Stories: