ஊத்தங்கரை, அக்.16: ஊத்தங்கரை அருகே மூங்கிலேரி, சந்திரப்பட்டி ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அருகே நடந்தது. முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, தவமணி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும், தெற்கு ஒன்றிய செயலாளருமான ரஜினி செல்வம், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். முகாமில் கலைஞர் உரிமை தொகை, முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, ஆதார் திருத்தம், புதிய பதிவுகள், ரேஷன் கார்டு திருத்தம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட தமிழக அரசின் 46 சேவைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது. நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி, ஜனா, துணை வட்டாட்சியர் சகாதேவன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபால், மாவட்ட பிரதிநிதி குப்புராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன், குமரேசன், ஊராட்சி செயலர்கள் நமசிவாயம், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- ஸ்டாலின்
- திட்டம்
- முகாம்
- ஊத்தங்கரை
- திட்ட முகாம்
- பஞ்சாயத்து யூனியன் முதன்மை பள்ளி
- மூங்கிலேரி
- சந்திரபட்டி பஞ்சாயத்துகள்
- தொகுதி
- அதிகாரி
- பாலாஜி, தவமணி
- மாவட்ட அறங்காவலர்
- குழு
- யூனியன்
- செயலாளர்...
