வாய்க்காலுக்கு தண்ணீர் விடக்கோரி பொங்கலூரில் விவசாயிகள் முற்றுகை

 

 

பல்லடம், அக். 11: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் பி.ஏ.பி. கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் விட கோரி பி.ஏ.பி. அலுவலகத்தை நேற்று விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொங்கலூர் ஒன்றியம், குள்ளம்பாளையம், வடசின்னேரிபாளையம் கிளை பி.ஏ.பி.வாய்க்கால் பகுதியில் 3,727 ஏக்கர் நிலம் உள்ளது. இப்பகுதிக்கு நேற்று (வெள்ளி) 4வது மண்டல பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் விடப்படவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் பொங்கலூரில் உள்ள பி.ஏ.பி. உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு தண்ணீர் திறந்து விடக்கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உதவி செயற்பொறியாளர் சுபாஷினி பேச்சுவார்த்தை நடத்தினார். கிளை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர் உறுதியளித்ததை தொடர்ந்து பாசன சபை தலைவர்கள் கண்டியன்கோவில் கோபால், பெரியார்பட்டி பாலசுப்பிரமணியம், குங்காரபாளையம் மணி உள்ளிட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: