பிரிட்டனில் கொரோனா பரவல் ஏற்றுமதியாளர்கள் கவலை

திருப்பூர், டிச.27: புதிய வகை கொரோனா வைரஸ் பரவலால் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை வர்த்தகம் குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) செயற்குழு உறுப்பினர் குமார் கூறியதாவது: பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான ஆடை வர்த்தகத்தில் அசாதாரண சூழல் உருவாகி வருகிறது. அந்நாட்டு வர்த்தகர்கள் மிக முக்கியமானதாக கருதப்படும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆடை வர்த்தகத்தை பெருமளவு இழந்துள்ளனர்.

திருப்பூர் நிறுவனங்கள் கோடை கால ஆடைகளை தயாரித்து அனுப்பி வருகின்றன. பண்டிகை கால பாதிப்பால் வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து கோடை கால ஆடைக்கான தொகை பெறுவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. மீண்டும் ஊரடங்கு அமலானால் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையான பாதிப்பை சந்திக்க நேரிடும். புதிய வைரஸ் விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: