சிவரக்கோட்டை சிப்காட் அரசாணை ரத்து அமைச்சர் உதயகுமாருக்கு விவசாயிகள் நன்றி

திருமங்கலம், டிச. 26: மதுரை மாவட்டம், சிவரக்கோட்டையில் 1,478 ஏக்கரில் சிப்காட் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, சிப்காட் அரசாணையை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து சிப்காட்டை ரத்து செய்ய வலியுறுத்திய் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமாரை, சிவரக்கோட்டை, கரிசல்காளன்பட்டி, சுவாமிமல்லம்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.  அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ‘திருமங்கலம் தொகுதியில் கப்பலூர் சிட்கோ மற்றும் அருகே உள்ள விருதுநகரில் சிட்கோ உள்ளன. சிவரக்கோட்டை சிப்காட் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர்.

இதை தொடர்ந்து நானும் அரசிடம் வலியுறுத்தியதால், சிப்காட் அரசாணையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.அப்போது விவசாயிகள் சார்பில் விவசாய சங்கத்தலைவர் ராமலிங்கம், அமைச்சர் உதயகுமாருக்கு சிவரக்கோட்டை பகுதியில் விளையும் 27 வகையான தானியங்களை பரிசாக வழங்கினார். அதிமுக ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வம், அவைத்தலைவர் ஐயப்பன், சிவரக்கோட்டை கவுன்சிலர் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: