அரசின் அலட்சியத்தால் விற்பனைக்கு போன விலையில்லா ஆடுகள்

ராஜபாளையம், டிச. 26:  ராஜபாளையம் சந்தை மார்க்கெட்டில் வியாழக்கிழமை தோறும் காய்கறி சந்தை மற்றும் ஆடு, மாடு விற்பனை சந்தையும் நடைபெறுவது வழக்கம் இதேபோல் நேற்றுமுன்தினம் சந்தை நடைபெற்றது இதில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோலைசேரி, படிக்காசுவைத்தான்பட்டி, ராமலிங்கபுரம், பிள்ளையார் நத்தம் உள்ளிட்ட நான்கு பகுதி ஏழை மக்களுக்கு தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இலவச ஆடு வழங்கும் திட்டம் திட்டத்தின் கீழ் ஆடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதில் இடைத்தரகர்கள் ஆடுகளைக் கொண்டுவந்து குவித்து விற்பனையில் ஈடுபட்டனர். அரசு ஆட்டுக்கு பதில் 10 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து ஆடுகளை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்றும், அப்படி வாங்கிய ஆடுகளுக்கு  சிலருக்கு முத்திரை அடித்த பின்பு தான் பணம் வழங்கப்பட்டது. இதனால் ஆடுகள் வாங்க வந்த பயனாளிகள்  கந்துவட்டிக்காரர்களிடம்  ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை அதிக பணம் கொடுத்து வாங்குவதற்காக கடன் வாங்கி ஆடுகளை வாங்கி சென்றனர்.  

இதில் ஒரு சிலர் வியாபாரிகள் ஆடுகளை கொடுத்து வாங்க சொல்லிவிட்டு மீண்டும் ஆடுகளை வாங்கி விட்டு  மீண்டும் ஆடுகளை அவர்களை வாங்கிக்கொண்டனர். ஒவ்வொரு ஆட்டிற்கும் 500 ரூபாய் வீதம் கமிஷனனும் பெற்றுக் கொண்டனர். அதிகாரிகள் மத்தியில் இதுபோன்ற அலட்சிய போக்கு மற்றும் அரசு திட்டங்களை தவறாக பயன்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதாக பயனாளிகள் வருத்தம் தெரிவித்தனர். எனவே,விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக முதல்வர் தலையிட்டு பயனாளிகளுக்கு வழங்க கூடிய விலையில்லா ஆடு, மாடுகளை கொள்முதல் செய்து பயனாளிகள் வழங்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: