கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு

கோத்தகிரி,செப்.27: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பால் சிறு, குறு தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த தொடர் மழை காரணமாக விவசாயித்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கபெற்றது. இதனால் மலை காய்கறி உற்பத்தி, தேயிலை உற்பத்தி என விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கோத்தகிரி பகுதியில் நிலவும் ஈரத்தன்மையால் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டும், பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்தும் வந்த நிலையில் இதமான ஈரப்பத கால சூழ்நிலையால் தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. தனியார் தொழிற்சாலைகளில் அரசு மானியம் வழங்கப்படாத நிலையில் பசுந்தேயிலை கொள்முதல் விலை 18 முதல் 25 ரூபாய் வரை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: