பெரம்பலூர் அருகே கல்பாடியில்

பெரம்பலூர், டிச.24: பெரம்பலூர் அருகேயுள்ள கல்பாடி அரசு ஆரம்ப சுகா தார நிலையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து பெரம்பலூர் கலெ க்டர்  வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய் வு செய்தார். ஆய்வின்போ து, பிரசவ பின் கவனிப்பு அறை, என்.சி.டி அறை, மருந்து கட்டும்அறை, குளிர் சா தன அறை, ஆய்வகம், மருந் தகம், மருத்துவர்அறை போ ன்றவற்றை பார்வையிட் டும், மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் வருகை, பணி விபரம், நோ யாளிகளின் எண்ணிக்கை, வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு களைப் பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து கல்பாடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார் பில் கட்டப்பட்டுள்ள தனி நபர்இல்லக் கழிப்பறைக ளையும், பொதுகழிப்பறை களையும் பார்வையிட்டு ஆ ய்வுசெய்தார். கிராமத்தின் சுற்றுப்புற ங்களை சுத்தமாகவும், சுகா தாரமாகவும் பராமரித்திட கழிப்பறைகளை பொதுமக் கள் பயன்படுத்துவதற்கு தேவையான விழிப்புணர் வுகளை ஏற்படுத்திட வேண்டும் என அரசு அலுவலர் களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, துணை இ யக்குநர் (சுகாதாரப் பணிகள்) கீதாராணி, தாசில்தார் அருளானந்தம், வட்டா ர வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, கல்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர் அனிதா ஆகியோர் உடனிரு ந்தனர்.

Related Stories: