அடிப்படை வசதி செய்து தராத பல்லடம் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்

திருப்பூர், டிச.24: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்காத பல்லடம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜனை மக்கள் நேற்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 57 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான திருக்குமரன் நகர், முத்தையன் நகர், அமராவதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில், வழிபாட்டு தளங்கள், வாரச்சந்தைகள், பள்ளிகள், சமூதாய கூடங்கள் ஆகியவைகள் உள்ளன. இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், எம்.எல்.ஏ. ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், அப்பகுதியில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு நேற்று வந்த பல்லடம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் எம்.எல்.ஏ. மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: