ஜெகந்நாதபெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகா அஷ்டமி ஹோமம்

கும்பகோணம், டிச. 23: நாதன்கோவில் ஜெகந்நாதபெருமாள் கோயிலில் சுக்லபட்ச மகாஅஷ்டமி ஹோமம் நேற்று நடந்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் நந்திபுர விண்ணகரம் எனும் நாதன் கோவிலில் ஜெகந்நாதபெருமாள் கோயில் உள்ளது. செண்பகவல்லி சமேத ஜெகந்நாத பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு பேறு அடைந்த தலமாகும். மேலும் மகாலட்சுமி பிரார்த்தனை செய்து எட்டு அஷ்டமி விரதம் இருந்து எட்டாவது அஷ்டமியில் திருமாலின் திருமார்பில் இணைந்த தலமாக போற்றப்படுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமியிலும் சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று நடந்த சுக்லபட்ச அஷ்டமி ஹோமம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: