சண்டிகர்: இமாச்சல் முன்னாள் முதல்வர் வீரபத்திரசிங். அங்கு 6 முறை முதல்வராக இருந்தார். அவருக்கும், இமாச்சல் மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபாசிங்கிற்கும் பிறந்த மகன் விக்ரமாதித்ய சிங். இமாச்சல் மாநில பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். 35 வயதான இவர் 2019ல் ராஜஸ்தான் அரச குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மணந்தார். கடந்த ஆண்டு இவர்கள் விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் நேற்று சண்டிகரில் வைத்து இரண்டாவது திருமணம் செய்தார். பஞ்சாப் பல்கலை உதவிப்பேராசிரியர் அம்ரீன் கவுரை அவர் திருமணம் செய்து கொண்டார். சண்டிகரில் நடந்த திருமண விழாவில் விக்ரமாதித்ய சிங்கின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
முன்னாள் முதல்வர் மகன் இமாச்சல் அமைச்சர் 2வது திருமணம்: பஞ்சாப் பல்கலை உதவிப் பேராசிரியரை மணந்தார்
- முன்னாள்
- முதல்வர்
- ஹிமாச்சல
- பஞ்சாப் பல்கலைக்கழகம்
- சண்டிகர்
- வீரபத்ர சிங்
- முதல் அமைச்சர்
- இமாச்சல பிரதேச காங்கிரஸ்
- ஜனாதிபதி
- பிரதீப் சிங்
- விக்ரமாதித்ய சிங்
- பொதுத்துறை அமைச்சர்
- ஹிமாச்சல பிரதேசம்
- ராஜஸ்தான் முதலமைச்சர்
