திருப்பூர், உடுமலை, தாராபுரத்தில் காஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,  டிச.22: காஸ் சிலிண்டர் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தும், விலை  உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும்   தி.மு.க. மகளிரணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் நடந்த  ஆர்ப்பாட்டத்துக்கு, மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளர் உமாமகேஷ்வரி தலைமை  வகித்தார். மத்திய மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ், முன்னாள்  எம்.எல்.ஏ.,கோவிந்தசாமி, தெற்கு தொகுதி பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன்,  வடக்கு தொகுதி பொறுப்பாளர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை  வலியுறுத்திப் பேசினார்கள். இதில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து  கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

உடுமலை:உடுமலையில் நடைபெற்ற போராட்டத்துக்கு தெற்கு மாவட்டப் பொறுப்பாளரும் மடத்துக்குளம் எம்எல்ஏவுமான ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.போராட்டத்தில் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விலை உயர்வைக் கண்டித்தனர். இதில் உடுமலை நகர செயலாளர் மத்தீன், ஆசாத் மு.க.முத்து, முபாரக் அலி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லதா, துணை அமைப்பாளர்கள் மலர்விழி, சுமித்ரா ராணி, உஷா, அசினா பானு, பாரதி, அனிதா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பானுமதி, துணை அமைப்பாளர்கள் பாக்கிய லட்சுமி, ஷாகிதா, முத்துலட்சுமி, வேலுமணி, சித்ரா, புஷ்பா, உடுமலை ஒன்றியகுழுத்தலைவர் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் மலர்விழி, பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, பொறுப்புக்குழு உறுப்பினர் சுசீலா, பொன் கணேஷ், செந்தில், ஈஸ்வரசாமி, சாகுல் அமீது, டாக்டர் சதீஸ் குமார், குப்புசாமி நிர்வாகிகள் உட்பட 900 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தாராபுரம்:தாராபுரத்தில் திமுக மாநில பிரச்சார குழு செயலாளர் சத்யா பழனிகுமார் தலைமையில் நடைபெற்ற  கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன் முன்னிலை வகித்து உரையாற்றினார். இதில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி ராஜேந்திரன்  மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் பிரபாவதி  பெரியசாமி, காங்கயம் பொறுப்புக் குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி தாராபுரம் நகர  மன்ற முன்னாள் தலைவர் சாந்தா தேவி, தாராபுரம் நகரக் கழகச் செயலாளர்  தனசேகர் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், நகர தகவல் தொழில்  நுட்ப அணி அமைப்பாளர் அன்பழகன், ஆனந்தி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்டனர்.

Related Stories: