தங்கம் விலை புதிய உச்சம்.. சென்னையில் இன்று ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டியது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி!!

சென்னை: தங்கம் விலை கடந்த மாதத்தில் இருந்து அதிரடியாக உயர்ந்து வருகிறது. விலை ஏற்றம் இல்லாத நாளே இல்லை என்ற நிலை நீடித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி முதல் தங்கம் விலை தினம், தினம் புதிய உச்சத்தில் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்தது.

இந்தநிலையில் அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை வார தொடக்க நாளான நேற்று சற்று குறைந்தது. சவனுக்கு ரூ.80
குறைந்து ஒரு சவரன் ரூ.81,680க்கு விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.82,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,280க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 144க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:

15.09.2025- ஒரு சவரன் (22 காரட்) – ரூ.81,680

14.09.2025- ஒரு சவரன் (22 காரட்) – ரூ.81,760

13.09.2025- ஒரு சவரன் (22 காரட்) – ரூ.81,760

12.09.2025- ஒரு சவரன் (22 காரட்) – ரூ.81,920

11.09.2025- ஒரு சவரன் (22 காரட்) – ரூ.81,200

Related Stories: