பெரம்பலூர், டிச.21: பெரம்பலூர் பகுதியில் குளிர் காலத்திலும் இளநீர் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. கோடைகாலம் என்றால் நமது தாகத்தைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குவது இளநீர் என்றால் அது மிகையல்ல. நவீன, கால மாற்றத்திற்கு ஏற்ப ரசாய ண குளிர்பானங்கள் எத்த னை பெயரில் எவ்வளவு விலையில் குவிக்கப்பட்டு போட்டி கொடுத்தாலும், மரு த்துவ ரீதியாகவும், மனதிற் கு இதமாகவும் மக்களை பெரிதும் ஈர்த்து, சிம்மாச னம் போட்டு வீற்றிருப்பது இளநீர் மட்டுமே. கோடைக் காலங்களில் குறிப்பாக நீர்மோர், சர்பத் என குளிர் பானங்கள் மக் களின் ஏகோபித்த எதிர்பா ர்ப்பைப் பெற்றிருந்தாலும் மருத்துவ ரீதியாக வயிற் றுப் புண்களை ஆற்றவும், சூட்டைத் தணிக்கவும், மரு த்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் கூட நேரடி யாக அருந்தக் கூடிய பான மாக இளநீர் மட்டுமே உள் ளது.கோடைக் காலத்தின் ஆபத்பாந்தவனாக விளங் கும் இளநீர் குளிர்காலத்தி லும் விற்பனையில் சூடு பிடித்து சக்கைப்போடு போ டுவது பெரம்பலூரில் ஆச் சரியத்தை ஏற்படுத்தியுள் ளது.