பிரபல நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிச் சூடு: கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்பு

சென்னை: மும்பை பரேலியில் உள்ள நடிகை திஷா பதானியின் வீட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு ரோஹித் கோதாரா மற்றும் கோல்டி பிரார் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. பிரபல நடிகை திஷா பதானி. இவர் கங்குவா, எம்எஸ் டோனி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்த நிலையில் நேற்று திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்தது. மும்பை பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் வில்லா எண் 40ல் வசித்து வரும் நடிகை திஷா பதானி வீட்டில் மாலை 4.30 மணிக்கு இந்த தாக்குதல் நடந்துள்ளது. 2 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் யாரும் காயம் அடையவில்லை. இதற்கு பிரபல தாதா கும்பலான ரோஹித் கோதாரா – கோல்டி பிரார் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. மேலும் திரைப்பட பிரமுகர்களுக்கு நேரடி அச்சுறுத்தல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக இந்தியில் வெளியிடப்பட்ட அறிக்கை வீரேந்திர சரண் மற்றும் மகேந்திர சரண் (தெலானா) என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்களிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அடுத்த முறை யாரையும் அவர்களின் வீட்டிலிருந்து உயிருடன் விடமாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: