உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்று: ரொனால்டா கோல் மழை மெஸ்ஸி சாதனை முறியடிப்பு

புடாபெஸ்ட்: 23வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கிறது. 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து திருவிழாவுக்கு போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும். உலகக்கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றுகள் கண்டங்கள் வாரியாக தற்போது நடந்து வருகிறது. ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் ஹங்கேரி-போர்ச்சுக்கல் அணிகள் மோதின. இதில் 3-2 என்ற கணக்கில் போர்ச்சுக்கல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் 58 நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணி கேப்டனான கிரிஸ்டியானா ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் தகுதி சுற்று போட்டிகளில் 39வது அடித்தார். இதற்கு முன் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி 36 கோல் அடித்ததே அதிகமாக இருந்தது. இதை ரொனால்டோ முறியடித்து சாதனை படைத்து உள்ளார்.

Related Stories: