கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு வீல் சேர் தராத 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்!!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 84 வயது நோயாளிக்கு வீல் சேர் தராத 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் எஸ்தர் ராணி, மாணிக்கவாசகம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிகிச்சை முடிந்து தந்தை வடிவேலுவை அழைத்துச் செல்ல அவரது மகன் வீல் சேர் கேட்டு நீண்டநேரம் காத்திருந்தார். வீல் சேர் வழங்காததால் கை தாங்கலாக தந்தையை அழைத்துச் சென்ற வீடியோ வலைதளங்களில் வைரலானது. மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி உத்தரவின்பேரில் விசாரணை நடத்தி 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Related Stories: