விருதுநகரில் ஊராட்சி பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர், டிச.17: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா, மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலைத்தொட்டி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு பொங்கல் கருணைத்தொகை, ஒரு மாத ஊதியம் வழங்க கோரி கோஷம் எழுப்பினர். மேலும் அடிப்படை ஊதியமாக ஆப்ரேட்டர்களுக்கு ரூ.1,400, தூய்மை காவலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அரசாணை உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

முற்றுகை

விருதுநகர் ரயில் நிலைய இருப்புப்பாதை பொறியாளர் அலுவலகம் முன்பாக மஸ்தூர் அமைப்பின் உதவிகோட்ட செயலாளர் சீதாராமன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.  ரயில்வே வாரியம் நிர்ணயம் செய்த நேர அளவை அமல்படுத்தாமல் மதுரை கோட்ட மஸ்தூர் அமைப்பு தன்னிசையாக பணியாளர்கள் நேரத்தை நிர்ணயம் செய்து வேலை வாங்குவதாக தெரிவித்தனர். போராட்டத்தில் பொறியியல் துறை, போக்குவரத்து கேட் கீப்பர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: