அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் உடன்குடி அதிமுக, பாஜவினர் திமுகவில் இணைந்தனர்

உடன்குடி, டிச.17: உடன்குடி பகுதியில் உள்ள பாஜ, அதிமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். உடன்குடி அருகேயுள்ள உதிரமாடன்குடியிருப்பு சமகவைச் சேர்ந்த இன்பராஜ், பச்சைமால், கருப்பசாமி, பாமகவைச் சேர்ந்த கார்த்திக், ஐக்கோர்ட்துரை, நாம்தமிழர் கட்சியைச் சேர்ந்த தர்மா, அதிமுகவைச் சேர்ந்த ராஜன், பாஜவைச் சேர்ந்த சத்தியராஜ் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி தண்டுபத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பாலசிங், மாநில மாணவரணி இணைச் செயலாளர் உமரிசங்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் முகைதீன், செட்டியாபத்து பஞ்.தலைவர் பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாய்ஸ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய் மற்றும் அமிர்தா மகேந்திரன், அப்துல்ஹமீது ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: