மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு திருவரங்குளம் வட்டார விவசாயிகளுக்கு நெல், உளுந்து தொழில்நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை, டிச.16: திருவரங்குளம் வட்டார விவசாயிகளுக்கு நெல் மற்றும் உளுந்து தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. புதுகை மாவட்டம் திருவரங்குளம் வட்டார விவசாயிகளுக்குத் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின்கீழ் நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி வம்பன் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெற்றிவேல் அனைவரையும் வரவேற்று பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை துணை இயக்குநர் சுருளிமலை பேசும்போது, மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசுத் திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினார்.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஆலோசகர் திருப்பதி முக்கிய இடுபொருட்களான விதை, தண்ணீர், உரம், பயிர்பாதுகாப்பு தொழில்நுட்பம் கடன் மற்றும் இயந்திரங்கள் பற்றியும் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் நெற்பயிருக்கு 1 கிலோ சிங்சல்பேட் மற்றும் 2 கிலோ யூரியாவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.மேலுரம் இடும் போது 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு 17 கிலோ பொட்டாஷ் கலந்து இடும் முறைகளை விளக்கினார். வேளாண்மை அலுவலர் பாண்டி நெற்பயிரை தொடர்ந்து உளுந்து சாகுபடி செய்திடவும் குறிப்பாக உளுந்துக்கு 4 கிலோ டி.ஏ.பி கரைசல் தயாரிக்கும் முறை மற்றும் தெளிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

வேளாண்மை அலுவலர் ரெங்கசாமி உளுந்து பயிருக்கு பூசா ஹைட்ரோ ஜெல் மற்றும்சூடோமோனாஸ் தெளிப்பதன் அவசியம் மற்றும் தெளிக்கும் முறைகளை விளக்கி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நெல் மற்றும் பயறு சாகுபடி நுட்பங்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் வெண்ணாவல்குடி கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் செல்வி, ராமசாமி, ரெங்கசாமி, முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இரவு ரோந்து பணி

இதுகுறித்து கீரனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: கீரனூரில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. கீரனூர் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் இரவு ரோந்து பணியை முறையாக செய்வதில்லை. பகல் நேரத்தில் கிராமங்களில் உள்ள பாலக்கட்டையில் உட்காந்திருக்கும் இளைஞர்களை மிரட்டியும், அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதிக்கும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணியை முறையாக செய்வதில்லை. இரவு ரோந்து போலீசார் நகரை சுற்றி வராமல் கீரனூர் காந்தி சிலை முன் நின்றுகொண்டு இரவு நேரத்தில் வரும் வாகனங்களை மறிப்பதோடு சரி. நகர வீதிகளில் ரோந்துக்கு போவதில்லை. கீரனூர் பகுதியில் திருட்டுதான் நடைபெறுகிறது. கைது நடவடிக்கை நடைபெறவில்லை. இதனால் இனியாவது போலீசார் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: