கெங்கவல்லி, தெடாவூர் பேரூராட்சி கூட்டம்

கெங்கவல்லி, ஆக. 30: கெங்கவல்லி பேரூராட்சி சாதாரண மாமன்ற கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் லோகாம்பாள் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ஜனார்த்தனன், துணை தலைவர் மருதாம்பாள் நாகராஜ் முன்னிலை வைத்தனர். இக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, அனைத்து கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு தீர்மானத்தை நிறைவேற்றினர். இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதேபோல், தெடாவூர் பேரூராட்சியில் நடந்த கூட்டத்திற்கு, பேரூராட்சி தலைவர் வேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் யவனராணி, துணை தலைவர் மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாமன்ற கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அனைத்து கவுன்சிலர்கள் ஒருமனதாக கையெழுத்திட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: