உப்பாறு அணைக்கு நீர் வழங்கக்கோரி விவசாயிகள் 7வது நாளாக போராட்டம்

தாராபுரம், டிச.15: தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு  திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் 7வது நாளான நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உப்பாறு அணைக்கு நீர் வழங்க கோரியும், பிஏபி பிரதான கால்வாயில் ராட்சத குழாய்களை பதித்து பல லட்சம் லிட்டர் தண்ணீரை கடத்தி விற்பனை செய்வதை கண்டித்தும், தண்ணீர்  திருட்டுக்கு உடந்தையாக இருக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும் தாராபுரத்தில் கடந்த ஒரு வாரமாக பாசன விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7வது நாளான நேற்று தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்ந்த நிர்வாகிகள் பொதுநல மற்றும் தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பச்சை நிற துண்டு அணிந்து பங்கேற்று விவசாயிகளின் போராட்டத்திற்கு  ஆதரவளித்தனர். முடிவில் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து உப்பாறு அணைக்கு பாசன நீரை விடுவிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்திட முடிவு செய்யப்பட்டது.

Related Stories: