கல்வி,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக,வன்னியர் சங்கம் பேரணி

தாராபுரம்.டிச.15: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் கல்வி. வேலைவாய்ப்பில் தமிழக அரசு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் பேரணி நடைபெற்றது.

வன்னியர் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோஷங்கள் முழங்க தாராபுரம் தென்தாரை பெரிய காளியம்மன் கோவில் திருமலையிலிருந்து பாமக மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு தாராபுரம் தாலுகா அலுவலகம் முன் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு திரளாக வந்தனர்.

 தொடர்ந்து கிராம நிர்வாகஅலுவலகத்தின் முன் கோஷமிட்ட வன்னியர் சங்கத்தினர் தாராபுரம் வடக்கு தெற்கு கிழக்கு பகுதிகளுக்கான கிராம நிர்வாக அலுவலர்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர். இது போல உடுமலையில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நகர தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் மனோகர்,சேகர், சிக்குமார், பாலகிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: