சின்கியுபீல்ட் கோப்பை செஸ் காத்து வாக்குல ஒரு வெற்றி பிரக்ஞானந்தா அமர்க்களம்: முதலிடத்துக்கு முன்னேற்றம்

சின்கியுபீல்ட்: அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில், செயின்ட் லூயிஸ் நகரில் சின்கியுபீல்ட் கோப்பைக்கான செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 9 சுற்றுகள் கொண்ட இத் தொடரின், 7வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன. தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, பிரான்ஸ் வீரர் அலிரெஸா ஃபிரோஸா உடன் மோதினார். துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா, வெறும் 27 நகர்த்தல்களில் அலிரெஸாவை வீழ்த்தினார். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் டிரா செய்த பின், நேற்று கிடைத்த வெற்றியால், பிரக்ஞானந்தா 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.

அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனாவும், 4.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷ், அமெரிக்க வீரர் வெஸ்லி ஸோ உடன் நடந்த போட்டியில் தோல்வியை தழுவினார். மற்றொரு போட்டியில், போலந்து வீரர் துடா ஜேன் கிறிஸ்டோஃப், உஸ்பகெிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவை வெற்றி கண்டார். அமெரிக்க வீரர்கள் பேபியானோ கரவுனா, லெவோன் ஆரோனியன் இடையில் நடந்த இன்னொரு போட்டி டிராவில் முடிந்தது.

Related Stories: