திருச்சியில் அனுமதியின்றி பேனர் அதிமுக நிர்வாகிகள் 14 பேர் மீது வழக்கு

திருச்சி: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 23,24,25 ஆகிய 3 நாட்கள் திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எடப்பாடியை வரவேற்க திருச்சி மாவட்ட அதிமுகவினர் பல்வேறு இடங்களில் போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஞானசேகர், ஜான்பீட்டர் உள்பட 14பேர் மீது காவல் நிலையங்களில் நேற்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: