சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்வு

மதுரை: சுபமுகூர்த்தம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பூக்களின் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது. மதுரை மலர்சந்தையில் ரூ.300 முதல் ரூ.600க்கு விற்பனையான ஒருகிலோ மல்லிகை ரூ.2,500க்கு விற்பனையாகிறது. ரூ.300க்கு விற்பனையான முல்லை, கனகாம்பரம் ஒருகிலோ ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.250க்கு விற்பனையான 1கிலோ பிச்சி ரூ.1000க்கும், ரூ.300 விற்பனையான ஒருகிலோ அரளி ரூ.600க்கும், ரூ.150க்கு விற்ற செவ்வந்தி ரூ.250க்கும் விற்பனையாகிறது.

Related Stories: