தமிழகத்திடம் கற்றறிந்து பஞ்சாப் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்க முயற்சிப்போம்: முதல்வர் பகவந்த் மான் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற பள்ளிகளில் காலை உணவு திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த திட்ட தொடக்க விழாவில் கலந்துகொள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்ந் மானுக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, பஞ்சாப் முதல்வர் பகவந்ந் மான் தனி விமானத்தில் புறப்பட்டு, நேற்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாடு கல்வி, உட்கட்டமைப்பு உள்பட பல துறைகளில் முன்னணியில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டம் குறித்து, தமிழ்நாட்டிடம் கற்று அறிந்து, பஞ்சாபிலும் தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம். பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும், விழாக்களிலும் தமிழ்நாடு முதலமைச்சரை கலந்துகொள்ள அழைப்போம். காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க என்னை அழைத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி.

Related Stories: