அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகம் சீல் வைப்பு

திருச்சி, டிச.11: திருச்சி தெப்பக்குளம் நந்தி கோயில் தெருவில், மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் விதிமுறைக்கு புறம்பாக பாலக்கரை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் கட்டப்பட்டது. இதில் தனியார் வங்கி உள்ளிட்ட கடைகள் இயங்கி வந்தன. இந்நிலையில் ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கிணங்க விதிமுறைக்கு புறம்பாக கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு சீல் வைக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தின் உள்ளே இருப்பவர்களை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளால் வெளியேற்றி கடைகளுக்கு சீல் வைத்தனர். வங்கிக்கு மட்டும் இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. திருச்சி அல்லூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி மாநகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories: