சென்னையில் வி.சி.பிரவீன் தலைமையில் பிஸ்கான் 25 தொழில்முனைவு மாநாடு

சென்னை: சென்னையில் வி.சி.பிரவீன் தலைமையில் கான்பெடரேஷன் ஆப் மலையாளம் அசோசியேஷன்ஸ் அமைப்பு, பிஸ்கான் 25 எனும் தொழில்முனைவு மாநாடு நடைபெற்றது. வி.சி.பிரவீன் தலைமையில் கான்பெடரேஷன் ஆப் மலையாளம் அசோசியேஷன்ஸ் அமைப்பு, பிஸ்கான் 25 எனும் தொழில்முனைவு மாநாட்டை சென்னையில் நடத்தினர். தொழில் முனைவோர், சிந்தனையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஒருங்கிணைக்கும் தனித்துவமான தளமாக இந்த மாநாடு அமைந்தது.

விழாவை என்எல்சி இந்தியா லிமிடெட் தலைவர் பிரசன்னா குமார் மோடுபள்ளி மற்றும் ஏ.வி.அனூப் (அவா குழுமத்தின் தலைவர்) ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். பிஸ்கான் 25 மாநாட்டில் முன்னணி தொழில்முனைவோர்கள் மற்றும் தலைசிறந்த நிபுணர்கள் பங்கேற்றனர். அவர்களில் நேச்சுரல்ஸ் சி.கே. குமாரவேல், byjus அர்ஜுன் மோகன், ராதிகா சரத்குமார் (ரேடான் நெட்வொர்க்ஸ்), டாக்டர் ஸ்ரீமதி கேசன் (ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா), Toy forest சிந்து ஆகஸ்டின்,

போபி செம்மனூர், சஞ்சய் கே ராய், டாக்டர் கே.அன்சாரி, கோபிநாத் முதுகாடு, பி.விஜயன் ஐபிஎஸ், சுமேஷ் கோவிந்த், சுரேஷ் பத்மநாபன், முருகவேல் ஜனாகிராமன், சி.சிவசங்கரன், மற்றும் பத்மசிங் ஐசக் (ஆச்சி மசாலா) ஆகியோர் தங்களது பயணத்தில் கற்றுக் கொண்டவை குறித்து பகிர்ந்தது புதிய தொழில் துவங்குவோருக்கு உந்து சக்தியாக அமைந்தது.

நாள் முழுவதும் ஸ்டார்ட்அப்கள், தொழில்நுட்பம், பிராண்டிங், தலைமைத்துவம் மற்றும் சமூகத்தில் தொழிலின் தாக்கம் ஆகிய அனைத்து துறைகளின் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. கலந்து கொண்டவர்கள் அனைவரும் புத்துணர்ச்சியுடன், ஊக்கத்துடன் மற்றும் தொழிலை வளர்க்கும் நடைமுறை கருத்துகளையும் நேர்மறை சிந்தனையையும் வழங்கி பிஸ்கான்’25 ஐ நிறைவு செய்தனர். வி.சி.பிரவீன் தலைமையிலான CTMA, தொழில் முனைவை மேம்படுத்தும் நோக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தி, எதிர்கால முயற்சிகளுக்கு புதிய அளவுகோலை அமைத்து சாதனை படைத்துள்ளார்.

Related Stories: