கோவை, ஆக. 23: கோவை குனியமுத்தூர் பெரியசாமி வீதியை சேர்ந்தவர் அன்வர் பாட்சா (25). ஆர்.எஸ்.புரத்தில் நடன பள்ளி நடத்தி வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி தடாகம் ரோட்டில் ஒரு கடையின் முன் நின்று, போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரது கையில் இருந்த செல்போனை பறித்து தப்பிச்சென்றார்.
இதுகுறித்து அன்வர் பாட்சா ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். அப்போது, அன்வர் பாட்சாவிடம் செல்போன் பறித்தது கோவை சாயிபாபாகாலனியை சேர்ந்த சதீஸ்குமார் (33) என தெரியவந்தது. இதையடுத்து, அவரை நேற்று கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்.
