லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் உள்பட மூவர் பலி

பள்ளிபாளையம்: சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே வேம்படிதாளத்தை சேர்ந்தவர் சுகுமார்(49). விசைத்தறிக்கு பாவு தயாரிக்கும் வைண்டிங் ஆலை வைத்துள்ளார். சுகுமாருக்கும், அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது.  இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, உறவினர்கள் மோகன் (54), அவரது மனைவி சுசீலா மற்றும் புவனேஷ்வரி ஆகியோரை அழைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வேம்படிதாளத்தில் உள்ள சுகுமாரின் வீட்டில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தை முடிந்ததும், சுகுமார், அவரது தாய் கமலம் (74) மற்றும் உறவினர்கள் 3 பேரும் பவானி கூடுதுறை கூடுதுறை சென்று குளித்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காரை சுகுமார் ஓட்டி வந்துள்ளார். மதியம் 12 மணியளவில் பச்சாம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே, மண் ரோட்டில் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில், சுகுமார், தாய் கமலம், உறவினர் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயங்களுடன் சுசீலா, புவனேஷ்வரி ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: