துறைமுக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: பாரிமுனை ராஜாஜி சாலை ரிசர்வ் வங்கி அருகில் சென்னை துறைமுக பொறுப்பு கழக அலுவலகம் உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் துறைமுக பொறுப்பு கழக தலைவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், விரைவில் அது வெடித்து சிதறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் இல்லை. இதையடுத்து இது வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து துறைமுகம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: