மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் பயணம் செய்த செல்வலட்சுமியின் (32), 2 வயது மகன் தேவ் ஆதிரன் வாயில் வைத்திருந்த மிட்டாயை திடீரென விழுங்கியுள்ளான். மிட்டாய் தொண்டையில் சிக்கியதால் சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. ‘ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் குமார், ஏஎஸ்ஐ சஜினி ஆகியோர் சிறுவனை தூக்கி குப்புற படுக்க வைத்து முதுகில் தட்டி முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். இதில் மிட்டாய் வெளியே வந்தது. போலீசாரின் இந்த சமயோசித புத்தியால் சிறுவன் காப்பாற்றப்பட்டதை பயணிகள் பாராட்டினர்.
