பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை; பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர். அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்” என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல.கணேசன் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் .

Related Stories: