கோவை, ஆக.14: கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை நடு வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (47). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பேச்சியம்மாள் (33). கடந்த 11ம் தேதி காலை இவர்களது வீட்டில் மட்டும் மின்தடை ஏற்பட்டது. இதனால், பேச்சியம்மாள் தனது கணவரிடம் எலக்ட்ரீசியனை அழைத்து வந்து சரி பார்க்கும்படி கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த ரமேஷ் ஸ்விட்ச் போர்டை கழட்டி மின் பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
